அறிவுசார் நூலகத்தை பார்வையிட்ட எம்எல்ஏ , துணை மேயர்

அறிவுசார் நூலகத்தை பார்வையிட்ட  எம்எல்ஏ , துணை மேயர்
X

அறிவுசார் நூலகம்

திருச்சியில் புதிதாக திறக்கப்பட்ட அறிவுசார் நூலகத்தை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் , திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் பார்வையிட்டனர்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக முடிவடைந்த திட்ட பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அந்தவகையில் திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாலக்கரை பிரதான சாலையில் வேர் ஹவுஸ் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள துணை நீரேற்று நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அறிவு சார் மையத்தை பார்வையிட்டனர்.

Tags

Next Story