காட்டாக்கொளத்தூரில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த எம்எல்ஏ

காட்டாக்கொளத்தூரில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த எம்எல்ஏ
திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர்
காட்டாக்கொளத்தூரில்திமுக வேட்பாளருக்கு எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.

காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள காரணை புதுச்சேரி ஊராட்சி மற்றும் ஊரப்பாக்கம் ஊராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் வாக்கு சேகரித்தனர்.

காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ,தலைமையில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்,

உள்ளாட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கிளைச் செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story