இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
எம்எல்ஏ ஜிகே மணி
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி கே மணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகத்தைப் போற்றி மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடப்படும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள், மனித வாழ்வியல் நெறிகளாக வகுத்தளத்துள்ள அர்ப்பணிப்புடன் வாழும் தியாக உணர்வு, எல்லோரிடத்தும் அன்பு செலுத்தும் உள்ளம், பிறர்க்கு உதவும் ஈகை நோக்கம், யாருக்கும் தீங்கிமைக்காத நல்லெண்ணம், அனைவரையும் நேசித்து பாசம் காட்டும் சகோதர நல்லிணக்கம், மனிதனை மனிதனாக மதித்து நடக்கும் மனிதநேயம் போன்ற நற்குணங்களை கடைப்பிடித்து அமைதி வாழ்வும் வளம்மிக்க வாழ்வும் அமைய அனைவரும் இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.பக்ரீத் கொண்டாடி மகிழம் இஸ்லாமியச் சகோதர-சகோதரிகள் அனைவரும் மகழ்ச்சியுடன், மன நிறைவுடன் எல்லா வளமும், பெற்று குடும்ப நலமுடன் நீடூழி வாழு நெஞ்சம் நிறைந்த இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story