விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்
ஆறுதல் கூறிய எம்எல்ஏ
சோழபுரம் கிராமத்திற்கு அருகேவுள்ள சாலை வளைவில் திருப்பத்தூர் பகுதியிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி வந்த லாரி பழுதாகி நின்றுள்ளது. அதேவேளையில் திருப்பத்தூரிலிரிந்து தனியார் பேருந்து ஒன்று சுமார் 40க்கும் மேற்பட்ட பயனிகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி வந்துள்ளது.
பேருந்தை பாஸ்கரன் என்கிற ஓட்டுநர் இயக்கிவந்துள்ளார். நடத்துனராக கருப்பையா என்பவர் உடனிருந்துள்ளார். பேருந்து ஒக்கூர் பகுதியை தான்டியதும் அதிக மழை பெய்ததாக கூறப்படுகிறது. இதில் நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் ஓட்டுநர் நிலை தடுமாறி மோதவே பேருந்தில் பயனம் செய்த ஓட்டுநர், நடத்துனர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் அதே நேரத்தில் பேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்றும் பேருந்தின் பின்னால் மோதி அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொது மக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும் அவ்வழியாக வந்த வாகனங்கள் மூலமாகவும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதகுபட்டி கூட்டுறவு வங்கியில் தங்கநகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்துவரும் ஜெயப்பிரியா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் நேரில் சந்தித்து விபத்து குறித்தும், சிகிச்சை எப்படி வழங்கப்படுகிறது என்றும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் ராஜா மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து ஒன்றிய செயலாளர் கோபி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்