தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் எம்எல்ஏ கலந்துரையாடல்

எம்.எல்.ஏ எழிலரசன்
காஞ்சிபுரம் மடம் தெரு, அறிஞர் அண்ணா பூங்கா எதிரில் இயங்கி வரும் தனியார் ஸ்கேட்டிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தனையும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பார்வையிட்டு அதில் பயிற்சி பெறும் மாணவர்களிடையே உரையாடினார். தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் நிலை இது போன்ற பயிற்சிகளை பெற தரமான மைதானங்களும் பயிற்சியாளர்களும் தற்போது காஞ்சிபுரத்தில் இதை துவக்கி உள்ளதால் இதில் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டியில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ஜெயசித்ரா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மண்டல குழு தலைவர் சந்துரு, பகுதி கழக செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
