இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில்,கள்ளப்பிரான்புரம், புதுப்பட்டு, கினார், ஏறுவாக்கம், கீழவளம், படாளம், எல்.என்.புரம் மேலும் பல ஊராட்சிகளை சுற்றி உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை(50 Cricket Kit) மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவரது சொந்த செலவில் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் V.G.குமரன்,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான இளைஞர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story