அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கிய எம்எல்ஏ

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 174 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், பள்ளியின் மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags

Next Story