அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச எழுது பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
எழுதுபொருட்கள் வழங்கல்
தமிழகத்தில் அரசு பொது தேர்வுகள் இன்னும் ஓரிரு மாதங்கள் நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு பொது தேர்வுக்கான பயிற்சிகளை அதிக கவனமாக கொண்டு வருகின்றனர்.மேலும் அரசு பொது தேர்வு முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில்10, +1 மற்றும் +2 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பாடபிரிவுகளுக்கான தேர்வு வினா வங்கி புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சிபுரம் நகரில் செயல்பட்டு வரும் பி எஸ் சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி, பி டி வி எஸ் பள்ளி என ஐந்து பள்ளிகளில் பயிலும் 42 மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுது பொருட்களான பேனா, பென்சில் , ரப்பர், ஸ்கேல் உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் அரசு பொது தேர்வுகளை பள்ளி மாணவ , மாணவிகள் எதிர் கொள்ள வேண்டிய செயல்களை எடுத்துரைத்தார்.தேர்வு எழுதும் முறைகள் குறித்து ஆசிரியர் தரும் எளிய சிறு குறிப்புகளை கவனமாக கேட்டறிந்து சிறப்பான முறையில் பேர் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவ மாணவிகளிடம் கேட்டுக் கொண்டார்.
தேர்வு எழுது பொருட்களை எடுத்து செல்ல அதற்குண்டான சிறு பையை அளித்ததும் மாணவர்கள் மறதி இன்றி தேர்வு பதட்டத்தை குறைக்கும் வகையில் இதை செய்ததை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என எம்எல்ஏ வை பலரும் பாராட்டுகின்றனர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.