ஊத்தங்கரையில் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு எம்எல்ஏ மரியாதை

ஊத்தங்கரையில் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு  எம்எல்ஏ மரியாதை

எம்எல்ஏ மரியாதை

ஊத்தங்கரையில் பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு ஊத்தங்கரை யில் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் TM. தமிழ் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் இன்று பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவுநாளினை முன்னிட்டு அதிமுக சார்பில் அண்ணாவின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் TM. தமிழ் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

ஊத்தங்கரை அதிமுக நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊத்தங்கரை அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன் மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் இளையராஜா, உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணா அவர்களை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்

Tags

Next Story