கரூர் அருகே அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
மாணவர்களுடன் எம்எல்ஏ
கரூர் அருகே அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரவணை ஊராட்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022- 23 திட்டத்தில் ரூபாய் 13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.
அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், வரவணை ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணகுமார், திமுக ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story