பெரம்பலூரில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த எம்எல்ஏ
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஓட்டத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை 26 விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒரு மாதிரி விளையாட்டுப்போட்டி (சிலம்பம்) தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ஜனவரி 12ஆம் தேதி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு ஓட்டப்போட்டி மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். 5 கி.மீ.தொலைவிற்கு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 25 வயதிற்க்குட்பட்ட பள்ளி, கல்லலூரிகளைச்சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஓட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி பாலக்கரை வளைவு சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்த விழிப்புணர்வு ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி அன்று நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது . இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா மற்றும் பலர் உடனிருந்தனர்.