புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் புதிய நியாய விலை கட்டிடம் எம்எல்ஏ திறப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பென்னாகரம் ஒன்றியம் ஆணைக்கல்லானூர் நியாய விலை கடை புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஜி கே மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்துவைத்து பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story