புதிய நியாய விலைக் கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காலப்பன அள்ளி நியாய விலை கடை கட்டடத்தை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பிர் ஜி கே மணி நேற்று மாலை திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் வட்டம் மற்றும் ஒன்றியம் காலப்பனஅள்ளி நியாய விலை கடை கட்டிடத்தை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜி கே மணி அவர்கள் நேற்று மாலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு பொருள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story