பெரியகுளம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

பெரியகுளம் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

பணிகளை தொடக்கி வைத்த எம்எல்ஏ 

பெரியகுளம் அருகே ரூ 39.48 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ சரவணகுமார் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023- 2024 ன் கீழ், ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோக கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கட்டிடத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ் .சரவணகுமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், ஊராட்சி செயலர் மீனா, திமுக பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம் பாண்டியன் தேனி வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஸ்டீபன் ,திமுக நிர்வாகி சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .

அதனைத் தொடர்ந்து பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குளத்துப்பட்டி பகுதியில் ரூபாய் 13. 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. அதனையும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் பூமி பூஜை செய்து கட்டுமானப் பணியினை துவக்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சி இந்திரா காலனி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 2024 ன் கீழ் ரூ.13. 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை,

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் ,

முதலாக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரபா மருதுபாண்டியன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீச சந்திரபோஸ் ,சேகரன் ,உதவி பொறியாளர் சேகர் , ஊராட்சி செயலர் செல்லப்பாண்டி ,முத்துச்செல்வம் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story