அம்மையப்பன் அரசு மாதிரி பள்ளியில் எம்.எல்.ஏ ஆய்வு

அம்மையப்பன் அரசு மாதிரி பள்ளியில் எம்.எல்.ஏ  ஆய்வு

எம்.எல்.ஏ ஆய்வு 

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் மாதிரி பள்ளியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் அடிப்படை வசதி, சுகாதாரம் ,குடிநீர் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் மாணவ மாணவியரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கொரடாச்சேரி ஒன்றிய துணைத் தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story