சேதமடைந்து கிடக்கும் துணை சுகாதார மையம் எம்.எல்.ஏ. ஆய்வு
நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீடூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, சேதமடைந்து காணப்படு கிறது. மழைக்காலத்தில் மழைநீர் ஒழுகி மருந்துகள் நனைந்து வீணாகிறது என்றும், டாக்டர்கள் அமர்ந்து சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை என்றும், நர்சுகள் தினமும் வருவதில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சிவக்கு மார் எம்.எல்.ஏ. நேரில் சென்று துணை சுகாதார மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர், துணை சுகாதார மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது பா.ம.க. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முத்துகிருஷ்ணன், பாபு, தேசிங்கு, தனசேகர், பாலு, அய்யனார், நந்தகோபால், செல்வநாதன், தன்ராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
Next Story