குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ ஆய்வு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ ஆய்வு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பென்னாகரம் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று வழக்கம் இந்த வகையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லாமல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது பொது மக்களுக்கு தேவையான கழிப்பிட வசதி, குளியலறை வசதி, குடிநீர் வசதி, உடைமாற்றும் அறைகள் உள்ளிட்ட பணிகள் ஒகேனக்கல்லில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜி கே மணி எதிர் சவ்வுடு பரவல் முறையில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை ஆய்வு செய்தார்.மேலும் விரைவில் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் இருந்தனர்.

Tags

Next Story