ரிங் ரோடு பணிகளை எம்எல்ஏ ஆய்வு !

சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு

சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு
திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்டு வரும் ரிங் ரோடு இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.
திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்டு வரும் ரிங் ரோடு இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வரும் குமாரமங்கலம் பிரிவு ரோட்டில் இருந்து கரட்டுப் பாளையம் வழியாக தோக்கவாடி வரை செல்லும் சாலை பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார். விரைந்து பணிகளை முடிக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.பணிகளை முடிக்க ஏதாவது தடைகள் இருந்தால் உடனடியாக தடைகளை நீக்கி தரப்படும் என ஒப்பந்ததாரருக்கு உறுதி வழங்கினார்.ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் பூங்கொடி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் லாவண்யா ரவி, மாவட்ட துணை தலைவர் அண்ணமார் செல்வராஜ்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பூங்கொடி, கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார், ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கட்சியினர் என பலரும் உடன் இருந்தனர்.
Next Story


