மருத்துவமனை கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு
மருத்துவமனை கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு, புதிதாக கூடுதல் கட்டிடம் வேண்டுமென தொடர்ந்து பொதுமக்களும் மருத்துவமனை நிர்வாகமும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் 5.கோடி மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோவிந்தசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேலை செய்த ஊழியர்களிடம் பணிகளை தரமாகவும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ துறை அதிகாரிகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.