குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை எம்எல்ஏ நேரில் ஆய்வு
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், திலகர் திடல் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு சரி செய்ய உத்தரவிட்டார்.
எம்.எல்.ஏ.வின் உத்தரவையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் உடைப்பை சரி செய்து வருகின்றனர்.
Next Story