ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை எம்.எல்.ஏ ஆய்வு
சோகத்தூர் ஊராட்சியில் வருகின்ற திங்கட்கிழமை வீர தமிழன் பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை அடுத்து போட்டியின் நடைபெறும் மைதானத்தில் இன்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற 04.03.2024 திங்கட்கிழமை அன்று சோகத்தூர் ஊராட்சியில் வீர தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பின்பு அங்கு உள்ள பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வீர தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story