நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த ஐ.பி செந்தில்குமார்

நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த  ஐ.பி செந்தில்குமார்

நீர் மோர் பந்தல் திறப்பு 

பழனியில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சி மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ பி செந்தில்குமார் துவக்கி வைத்தார். கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பொது மக்களுக்கு இளநீர் நுங்கு தர்பூசணி வெள்ளரிக்காய் மற்றும் நீர்மோர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கோடை காலம் முடியும் வரை நீர்மோர் பந்தல் செயல்படும் என எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் பேரூர் செயலாளர் சின்னத்துரை அபுதாஹிர் ஒன்லி டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story