மண்டபம் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

மண்டபம் அருகே பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

ரேஷன் கடை திறப்பு 

மண்டபம் அருகே வேதாளையில் பகுதி நேர ரேஷன் கடையை காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்ஏ., திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை மேற்கு தெருவில் பகுதி ரேஷன் கடையை காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., திறந்து வைத்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார். வேதாளை ஊராட்சி தலைவர் செய்யது அல்லாபிச்சை திறப்பு விழாவிற்கான ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், ஊராட்சி செயலர் ராஜேந்திரன், மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக., செயலர் நிலோபர் கான் வேதாளை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த திமுக., நிர்வாகிகள் ஹபீஸ், அபுபக்கர், முருகேசன், ஜெயக்குமார், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story