கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த எம்எல்ஏ கதிரவன்

கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த எம்எல்ஏ கதிரவன்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று காலை 11 மணியளவில் எம்எல்ஏ கதிரவன் சாமி தரிசனம் செய்தார்.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று காலை 11 மணியளவில் எம்எல்ஏ கதிரவன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி மாவட்டம் கல்பாளையத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு எம்எல்ஏ கதிரவன் வருகை தந்தார். அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து கோவிலுக்குச் சென்ற எம்எல்ஏ கதிரவன் அங்கு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தார்.பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story