தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிவாரணம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு  எம்.எல்.ஏ. நிவாரணம்

எம்.எல்.ஏ லட்சுமணன் நிவாரண உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ லட்சுமணன் நிவாரண உதவியை வழங்கினார்.

விழுப்புரம் அருகே வி.அகரம் காலனியை சேர்ந்த அமுதா, கீதா ஆகியோரின் குடிசை வீடுகள் நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் 2 வீடுகளிலும் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை டாக்டர் இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் மற்றும் நிதி உதவி ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் அரசு தரப்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கிளை செயலாளர்கள் திருமுருகன், கேசவன், மாணவரணி விஜய், கிளை நிர்வாகிகள் சரண்ராஜ், ஆனந்தபாபு, பாண்டியராஜன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் ரவிச்சந்திரன், தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல், கிராம நிர்வாக அலுவலர் சுமதி உள்பட பலர் உடனிருந்தனர்.


Tags

Next Story