ஆற்காடு அருகே சமுதாயக் கழிப்பறைக்கு எம்எல்ஏ அடிக்கல்

ஆற்காடு அருகே சமுதாயக் கழிப்பறைக்கு எம்எல்ஏ அடிக்கல்

அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ


ஆற்காடு நகராட்சியில் ₹34.60 இலட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை கட்டும்பணிக்கு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் 23வது வார்டு மாசிலாமணி நகர் பகுதியில் எஸ்.பி.எம்.2.0 2022-23 திட்டத்தின் கீழ் ரூ34.60 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக சமுதாய கழிப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவிபாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில் நகர மன்ற துணைத் தலைவர் டாக்டர்.பவளக்கொடி சரவணன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகராட்சி பொறியளார் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 26வார்டு நகரமன்ற உறுப்பினர் காமாட்சி பாக்கியராஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஒப்பந்ததாரரை அழைத்து பணி சிறப்பாக, வேகமாகவும் வேலையை முடிக்கவும் அறிவுறுத்தினார்.இதில் ஆற்காடு திமுக நகர செயலாளர் ஏ.வி.சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் அணுஅருண், தஷ்ணாமூர்த்தி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

Tags

Next Story