காத்திருப்போர் கூடம் கட்ட எம்எல்ஏ அடிக்கல்
அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்
காத்திருப்போர் கூடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சிவபுரி ஊராட்சி தென் சிவபுரி பகுதியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள காத்திருப்போர் கூடம் கட்டும் பணிக்காக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story