பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறியும் எம் எல் ஏ

பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறியும் எம் எல் ஏ

திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி சட்டமன்ற தொகுதியில் மக்களை சந்தித்து மக்களின் தேவைகளையும், குறைகளையும் நேரடியாக கேட்டு அறிந்தார்.

திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி சட்டமன்ற தொகுதியில் மக்களை சந்தித்து மக்களின் தேவைகளையும், குறைகளையும் நேரடியாக கேட்டு அறிந்தார்.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 'குரல் கேட்போம் குறை களைவோம்' என்ற தலைப்பில் திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து மக்களின் தேவைகளையும், குறைகளையும் நேரடியாக கேட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய தத்தலூர், அம்மணம்பாக்கம் நரப்பாக்கம் பொன்பதிர்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் பொதுமக்களை நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.அதன் பேரில் கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் இலவச வீட்டு மனை பட்டா, மின் இணைப்பு, குடிநீர் தேவை உள்ளிட்டவைகளை கோரி எம்எல்ஏ பாலாஜியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.

அனைத்திற்கும் விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தவர் நரப்பாக்கம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர் மேற்படிப்பிற்காக எனக்கு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவில் சேர வேண்டும் என எம்எல்ஏ பாலாஜியிடம் கோரிக்கை வைத்தார். மதிப்பெண் குறைவாக உள்ளதால் அரசு கல்லூரியில் கிடைப்பது கடினம் என்றும், தனியார் கல்லூரியில் முயற்சி செய்யலாமா என எம்எல்ஏ மாணவியிடம் கேட்டார்..அதற்கு மாணவி சரி என்று ஒப்புதல் அளித்தார்.

அதன் பேரில் திருப்போரூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விவரித்து மாணவிக்கு தேவையானதை செய்து கொடுக்கிறேன் என எம் எல் ஏ பாலாஜி உறுதி அளித்தார்..ஆய்வின் போது முன்னாள் எம்எல்ஏ வீ தமிழ்மணி திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர் டி அரசு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் ஒன்றிய பொருளாளர் தனசேகர் விசிக மாவட்ட பொறுப்பாளர் ஆ நா பெருமாள் திமுக இளைஞரணி செயலாளர் பரந்தாமன் துணை செயலாளர் எம் கே தினேஷ், பொறுப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோருடன் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story