நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு எம்எல்ஏ பங்கேற்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு எம்எல்ஏ பங்கேற்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூரில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில், 84 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், 30, 000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில், அதிகப்படியாக சம்பா பருவத்தில், நெல் மற்றும் மணிலா ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதற்காக, பவுஞ்சூர் பகுதியில் 14, சித்தாமூர் பகுதியில் 16 என, செய்யூர் வட்டத்தில் மொத்தம் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், செய்யூர் ஊராட்சியில், நேற்று புதிதாக நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. செய்யூர் வி. சி எம்எல்ஏ பாபு பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையத்தை துவங்கி வைத்தார்.

Tags

Next Story