வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை - எம் எல் ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் எம் எல் ஏ பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த நன்மங்கலம் ஊராட்சி வீரபாண்டி நகர் பிரதான சிமெண்ட் சாலை அமைக்க மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்க 26.92 லட்சம் மதிப்பீட்டிலும், அதே போல் இந்திரா நகர் முதல் வீரபாண்டி நகர் வரை 28.05 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்,புனித தோமையார் ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் G.வெங்கடேசன்,ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா, மாவட்ட குழு உறுப்பினர் N.வேதகிரி ஊராட்சி மன்ற தலைவர் V.கிரி, துணை தலைவர் K.V. கார்த்திகேயன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story