திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் குறித்து திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் குறித்து திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக மற்றும் கூட்டனி கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அருண்நேரு போட்டியிடுகிறார். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் தேர்தல் பணிகள் குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக வேட்பாளரை ஆதரித்து அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் வாக்குகள் சேகரிக்கவும்,தேர்தல் களப் பணிகள் குறித்தும்.அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இந்நிகழ்வில் எம்எல்ஏ கதிரவன், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story