பள்ளி கட்டிட பூமி பூஜையில் எம் எல் ஏ பங்கேற்பு

அரசு மேல்நிலை பள்ளி புதிய வகுப்பறைகளுக்கான கட்டிட பணிகளை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

திருப்பூர், விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1,55,55,268 கோடி மதிப்பீட்டில் புதிதாக எட்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் , துணை மேயர் பாலசுப்பிரமணியம், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, உதவி ஆணையர் வினோத், 47-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயசுதா, தெற்கு மாநகர செயலாளர் டி கே டி. நாகராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Tags

Next Story