அரசு பள்ளி மாணவிகளை பாராட்டிய எம்எல்ஏ

அரசு பள்ளி மாணவிகளை பாராட்டிய எம்எல்ஏ

எம்எல்ஏ பாராட்டு 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளை பாராட்டி தர்மபுரி எம்எல்ஏ பரிசு வழங்கினார்.

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட அளவில் அரசு பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவி இரத்தினாதேவிக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து, பாராட்டி, வாழ்த்து தெரிவித்து, பரிசு வழங்கினார்.

மேலும், பள்ளியின் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும் பாராட்டி பரிசு வழங்கினார். அதுமட்டுமின்றி மாணவி முதலிடம் பெறுவதற்கு பெறும் முயற்சி செய்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.கிருஷ்ணன், துணை தலைமை ஆசிரியர் கே.மாணிக்கவாசகம், பள்ளி வகுப்பு ஆசிரியர் விஜியலட்சுமி மற்றும் ஆசிரியர் பெருமக்களையும் சால்வை அணிவித்து பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story