சிறுபான்மையினர் ஆணைய தலைவருக்கு எம்எல்ஏ பாராட்டு
பீட்டர் அல்போன்ஸிற்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டு
தமிழகத்தில் புதிய வழிபாட்டுத்தலங்கள் கட்ட 30 நாட்களுக்குள் அனுமதி வழங்குவதற்கான அரசாணை வெளியிட உதவிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸிற்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிய வழிபட்டு தலங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் கேட்டு பெறப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சியர்கள் முப்பது நாட்களுக்குள் விசாரணை செய்து முடிவுகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே இருக்கும் வழிபட்டு தலங்களை சீரமைத்து புதிதாக கட்டுவதற்கும், பழுது பார்க்கவோ புதுப்பிக்கவோ அல்லது முழுமையாக இடித்து விட்டு புதிதாக கட்டவோ மாவட்ட ஆட்சியரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய அவசியமில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட உதவிய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
Next Story