போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ பரிசு

கேலோ - இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி



கேலோ - இந்தியா விளையாட்டு விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வழங்கினார். இதில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் , செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உடற் கல்வி ஆய்வாளர் ,மாவட்ட விளையாட்டு அலுவலர், அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள்,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story




