நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ராஜா எம்.எல்.ஏ

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த  ராஜா எம்.எல்.ஏ

நீர் மோர் பந்தல் திறப்பு

சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை எம்எல்ஏ ராஜா திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு கோடைகால வெப்பத்தை தணிக்கும் விதமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி, தென்காசி திமுக மாவட்ட பொருளாளர் இல,சரவணன், தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, பொதுக்குழு உறுப்பினர் பரமகுரு உள்ளிட்ட ஏராளமானோர் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story