அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ  ஆய்வு

எம்.எல்.ஏ ஆய்வு 

கோரிப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வருபவர்கள் தங்கும் காத்திருப்போர் கூடத்தை எம்எல்ஏ பூமிநாதன் ஆய்வு செய்தார்.

மதுரை கோரிப்பாளையம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக தினசரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரத்தியேக மகப்பேறு மருத்துவ வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 30க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக வருபவர்கள் தங்குவதற்காக மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 65 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் கூடமானது கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த காத்திருப்போர் கூடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 27 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.இந்த நிலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காத்திருப்போர் கூடத்தை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்வில் அரச ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், மருத்துவ உயர் அலுவலர் ஸ்ரீ லதா,மருத்துவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story