மேட்டூர் அருகே அரசு பள்ளியில் எம்.எல்.ஏ ,ஆய்வு.
மேட்டூர் அருகே அரசு பள்ளியில் எம்.எல்.ஏ ,ஆய்வு.
மேட்டூரையடுத்த கொளத்தூர் அருகே காவேரிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட சமையல் கூட முழுவதும் மனித கழிவுகளை பூசி மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து, மேட்டூர் வட்டாட்சியர் விஜி, கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் வருவாய், காவல்துறை அதிகாரிகள், பள்ளியில் முகாமிட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளியில் பாதுகாப்பு , சுற்றுச்சூழல் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டமன்ற தலைமைச் செயலாளர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளியில் நடந்த அசம்பாவிதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள கூறியதை அடுத்து காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் காவேரிபுரம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் என அதிகாரிகள் பட்டாளமே இரண்டாவது நாளாகவும் பள்ளியில் முகாமிட்டு
பணிகளை தீவிரப் படுத்தி உள்ளனர். மேலும் பள்ளியில் பாதுகாப்பற்ற சூழலில் உள்ள குடிநீர் தொட்டிக்கும் பூட்டு போட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் காவேரிபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மனித கழிவுகளை பூசி சென்ற மர்ம நபர்கள் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. உடனடியாக தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையில் இது போன்ற அசாதாரண சூழ்நிலை நிலவும் பள்ளிக்கு சுற்றுச்சுவரும் ஒப்பந்த அடிப்படையில் இரவு காவலாளியையும் நியமித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சதாசிவம் தெரிவித்துள்ளார்.