சத்துணவு கூடத்தில் எம்எல்ஏ., ஆய்வு
இலக்கியம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் செயல்படும் சத்துணவு கூடத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டம் இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட இலக்கியம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் மதிய உணவை தரமான முறையில் சமைத்து பள்ளி மாணவர்களுக்கு வழங்க படுகிறதா என்று சட்டமன்ற உறுப்பினர் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலரிடம் கேட்டறிந்தார். மேலும் ஏதேனும் அடிப்படை தேவைகள் இருந்தால் தெரிவிக்கும் படியாகவும் அந்த தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story