ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய பணி - எம்எல்ஏ ஆய்வு
எம்.எல்.ஏ ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்டபோளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள படவேடு பகுதியில் நேற்று ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது,பொதுப்பணித்துறை மூலம் ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பணிகள் முடிந்தவுடன் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கப்படும் அப்படி துவங்கி வைத்தவுடன் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக தொலைதூரம் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை உங்கள் அருகாமையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால் சிகிச்சை பார்ப்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். மேலும் படவேடு பகுதியில் மேம்பாலம் உயர் மட்ட பாலம் சாலைகள் பக்க கால்வாய்கள் கோவில் புனரமைத்தல் என பல்வேறு வளர்ச்சி பணிகள் வேண்டுமென்று என்னிடமும், அமைச்சரிடம் கேட்டபோது உங்களுக்கு படிப்படியாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று கூறிய தன் அடிப்படையில் படவேடு பகுதியில் சாலைகள், கோயில் புனரமைத்தல், பக்க கால்வாய் ,கல்வெட்டுகள் ,பாலங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ இவ்வாறு கூறினார். ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் சக்தி பெருமாள். ஒன்றிய செயலாளர் ஆர்.வி.சேகர். வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு. அறங்காவலர் குழு உறுப்பினர் முருகன், ஒப்பந்ததாரர் சங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் இருந்தனர்.