பகுதி நேர நியாய விலைக் கடையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
டொக்கு போதன அள்ளி ஊராட்சி சொக்கனேரி சிவக்காலக்கொட்டாய் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடையில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி வட்டம், டொக்கு போதன அள்ளி ஊராட்சி சொக்கனேரி சிவக்காலக்கொட்டாய் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக்கடையில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி பருப்பு, சர்க்கரை சமையல் எண்ணெய் உள்ளிட்ட போய் தரமானதாகவும் சரியான அளவில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா.. என ஆய்வு செய்தார். பின்பு எடை தராசு மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்பு பொதுமக்களிடம் தினந்தோறும் சரியான நேரத்தில் கடை திறந்து பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறதா என பொதுமக்களுடன் கேட்டு அறிந்தார் இந்த நிகழ்ச்சியில் துரை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர் பாமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
Next Story