திருச்செங்கோடு அரசு சித்த மருத்துவமனை பிரிவில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவமனை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல், சளி, உடல் வலி, போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் அவர்கள் சித்த மருத்துவமனை பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சித்த மருத்துவமனை பிரிவில் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா மேலும் மருந்துகள் போதிய அளவில் உள்ளதா என திடீர் ஆய்வு மேற்கண்ட மேற்கொண்டார். மேலும் அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இந்த திடீர் ஆய்வின் போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Next Story