திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு நோய் தொற்றுக்களுக்காக ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் புற நோயாளியாகவும், உள் நோயாளிகளாகவும். மக பேருக்காகவும் தினம் தினம் வந்து செல்கின்றனர் இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் மருத்துவர்கள் சரியான முறையான சிகிச்சை அளிக்கிறார்களா என்று நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பின்பு மருத்துவரிடம் மருந்து மாத்திரைகள் தட்டுபாடாக உள்ளதா என்றும் நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவனையில் தூய்மையாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்து அலுவலர் சிவக்குமார் ,மருத்துவர் பிரபாகரன் ,திமுக நிர்வாகிகள் தசரதன் ,சந்திரசேகரன், குணசேகரன் மோகன்ராஜ், டி.பி ரமேஷ் கே.பி ஜோதிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.