பென்னாகரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ள கிராமங்களில் எம்எல்ஏ ஆய்வு
எம்எல்ஏ ஆய்வு
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ள கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டு கூடிய திட்ட பணியாளர்களுடன் எம்எல்ஏ திடீர் கள ஆய்வு செய்தார்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி குடிநீர் பிரச்சினை அதிகம் உள்ள கிராமங்களில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி ஒரு சில கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியாளர்களுடன் நேரில் சென்று குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு மமேற்கொண்டார்.
10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் ஆண்கள் இருசக்கர வண்டியில் ஆறு குடங்கள் ஏழு குடங்களுடன் தண்ணீர் மூன்று, நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு எடுத்துச் சென்றதை பார்த்து வருத்தம் தெரிவித்து அதிகாரிகளிடம் உடனடியாக பேசி போர்க்கள அடிப்படையில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்,
இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பெரியோர்கள் என பலர் இருந்தனர்.
Next Story