ஜல்லிக்கட்டு போட்டியில் டோக்கன் குறித்து எம்எல்ஏ விஜயபாஸ்கர் கேள்வி !
எம்எல்ஏ விஜயபாஸ்கர்
ஜல்லிக்கட்டு போட்டியில் டோக்கன் குறித்து விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான டோக்கன் விநியோகிப்பது கமிட்டி மூலமே விநியோகிக்கும் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரில் கவனயீர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சி விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு போட்டி நடத்தும் குழுவினர் மூலமாக கொடுக்கப்படும் டோக்கன் முறையே தொடர வேண்டும் என உரையாற்றினார். இல்லை டோக்கன் முறையை நடைமுறைப்படுத்தப்படுவதால் அதிக அளவிலான காளைகள், பெயர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை இருப்பதாக சி விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக அளவிலான காளையர்களும் காளைகளும் பங்கேற்கும் விதமாக டோக்கன் வழங்கும் முறையிலேயே போட்டியை நடத்தும் குழுவினரால் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story