அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய போது

சட்டமன்ற உறுப்பினர் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்
தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து 1,016 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பெரியசாமி, நகர செயலாளர் சிவக்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 209மாணவர்கள் , முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 244 மாணவிகள் , முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 376 மாணவிகள், தண்டலை புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த187 மாணவர்கள் உட்பட 1,016 மாணவ, மனைவிகள் அரசின் விலையில்லா சைக்கிள்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நவஜோதி புகழேந்தி மற்றும் முசிறி நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story