விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ !

விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ !

விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

,இராமாபுரம், அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-155, இராமாபுரம், அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., பொதுக் குழு உறுப்பினர் வ.செல்வகுமார், M.C., பகுதி துணை செயலாளர் இரா.பால்பண்டியன், மாவட்ட அமைப்பாளர் V.ராஜேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் செ.ரவி, மாமன்ற உறுப்பினர் கே.ராஜி, M.C., வட்ட கழக செயலாளர் ஆ.ராதாசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் M.L.நாதன், A.D.எத்திராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story