கோயம்பள்ளியில் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோயம்பள்ளி ஊராட்சி, ஆதிதிராவிடர் காலணியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பீட்டில் 2022 -23 ஆண்டு திட்டத்தில், புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற் குடையை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி, கோயம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி மயில்ராஜ், தாந்தோனி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுச்சாமி, கரூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மணவாளன், ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, புதிய பயனியர் நிழற்குடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.