உருமநாதர் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட எம்எல்ஏ

தேர் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்

உருமநாதர் ஆலய தேர்த்திருவிழாவில் எம்எல்ஏ கலந்துகொண்டார்.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் பெங்களூரில் அருள்மிகு ஸ்ரீ உருமநாதர் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதான நிகழ்வை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன் , பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர் , பெருங்களூர் கவுன்சிலர் முத்துலட்சுமி சாமிஅய்யா மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story


