பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ

மதுரவாயலில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்.

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, 151வது வட்ட மாமன்ற உறுப்பினர் ச.சங்கர்கணேஷ், ஏற்பாட்டில் சென்னை மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன் ராஜ் கலந்து கொண்டு நோட்டு, பென்சில் பெட்டகம் போன்றவற்றை வழங்கினர்.

இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., பகுதி துணை செயலாளர் இரா.பால்பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் V.விஜயன், R.சேகர், க.பிருந்தாவனம், அவை தலைவர் செ.ராமையா, துணை செயலாளர்கள் K.முரளி, விமலா சேகர், பொருளாளர் V.பன்னீர்செல்வம், பகுதி பிரதிநிதிகள் கோ.கண்ணதாசன், K.குமார், M.சுந்தர், N.துரை, அணிகளின் அமைப்பாளர்கள் பா.தனசேகர், P.ரகு, P.K.சண்முகம், E.பிரசாந்த், R.ராஜேஷ், வட்ட நிர்வாகிகள் ஆட்டோ கிருஷ்ணன், M.தங்கராஜ், லோகேந்திரபாபு, செந்தில்குமார், செ.ராஜா, P.பாலாஜி , சுரேஷ், G.ராமதாஸ், பரிமளா, நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story